வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் விதித்த அமேசான்..!
அமேசான் நிறுவனத்தின் அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் வாரத்தில் எத்தனை நாள் அலுவலகம் வர வேண்டும் என்பதை அந்தந்த குழுவின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ Andy Jassy தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்று இருந்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் முன்னதாக கொடுக்கப்படும் அறிவிப்பின் அடிப்படையில் குழுவின் ஆலோசனை கூட்டங்களில் நேரில் கலந்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது. ஆண்டில் 4 வாரங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்த படி வேலை செய்ய அமேசான் அனுமதித்துள்ளது.
Comments